தெய்வமாக வணங்கும் வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் அதிசய கிராமம்

Update: 2022-10-22 13:32 GMT

குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் உள்ள வவ்வால் தோப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களும், புளியமரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்களும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர்...

தாங்கள் குல தெய்வமாக வணங்கும் வவ்வால்கள் வசித்து வருவதால் இப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை...

பட்டாசு சத்தத்தால் அவை பயந்து விடக் கூடாது என்பதற்காக பட்டாசு வெடிக்க மாட்டோம் என அவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

உறவுகளைப் போல் வவ்வால்களை நடத்தும் இந்த கிராம மக்கள், அவை வந்த பிறகு தான் நன்மைகள் நடப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்...

தீபாவளி மட்டுமல்லாது எந்த நிகழ்ச்சிக்குமே இவர்கள் பட்டாசு வெடிக்காதது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்