எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

Update: 2022-11-26 08:31 GMT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்சி எதிர்ப்பு தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், யாரையும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அனுஷ்யாவை அநாகரிகமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து, தொலைபேசியில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்