காரில் சென்ற பிரபல நடிகை சுட்டுக்கொலை.. கொள்ளையர்கள் வெறிச்செயல்

Update: 2022-12-29 10:25 GMT

மேற்கு வங்கத்தில் ஜார்க்கண்ட் நடிகை இஷா ஆல்யா கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், தனது கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் இஷா ஆல்யா காரில் சென்று கொண்டிருந்த போது, 3 கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பணப் பையை திருட முயன்றவர்களை தடுக்க முயன்றதால், இஷா ஆல்யாவை சுட்டுக் கொன்றுவிட்டு மூன்று பேரும் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்