ஓயாமல் குரைத்த நாய்... கோபத்தில் துப்பாக்கி சூடு - திருச்சியில் பரபரப்பு

Update: 2023-04-23 12:41 GMT

திருச்சியில் தெருநாய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்த சையது உசேன் என்பவரின் வீட்டருகே இரவு நேரத்தில் தெரு நாய் ஒன்று ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது. அவர் பல முறை விரட்டியும், நாய் போகாததால் கோபமடைந்த சையது உசேன், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து, நாயை சுட்டுள்ளார். இதில், நாய் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டதால், வீட்டருகே வசித்து வரும் பழனியப்பன் என்பவர் பாலக்கரை போலிசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சையது உசேனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்