27 நிமிடத்தில் 55 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (15.06.2023)
மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூர்க்க குணத்தோடு மத்திய அரசு நடந்து கொள்வதாக குற்றம்சாட்டிய அவர், எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் சோதனை நடைபெறுவதாக தெரிவித்தார். மத்திய அரசின் அச்சுறுத்தலால் அமைச்சரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு தற்போது நடவடிக்கை எடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன என்றார். மேலும், நாம் தமிழர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது, அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறும் வகையில் சட்டம் கொண்டுவருவேன் என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்... பிரதமர் மோடி மாநிலங்களை மதிப்பதே கிடையாது என்று விமர்சித்த அவர், பாஜகவின் நிலைப்பாடு ஒரே நாடு ஒரே கொள்கை என்று கூறினார். இது ஒரே கட்சி ஒரே தலைவர் என வந்து நிற்கும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்..