போலீசார் என கூறி வியாபாரியிடம் கம்பி நீட்டிய கும்பல் - சிக்கிய பெண் உட்பட 5 பேர்

Update: 2022-12-19 06:58 GMT

ஈரோடு மாவட்டத்தில் போலீஸார் என கூறி ஜவுளி வியாபாரியிடம் இருந்து 29 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி அன்சார்.

இவர் கடந்த 14-ஆம் தேதி 29 லட்ச ரூபாய் பணத்துடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜவுளி வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது, அன்சாரியை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் என கூறி, வாகன சோதனையில் ஈடுபட்டு 29 லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக அன்சாரி அளித்த புகாரின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளையடித்து சென்ற கும்பலின் கார் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், மகாலட்சுமி என்பவரை கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழக கேரள எல்லையில் வாகன சோதனையின் போது 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

அவர்களிடம் இருந்து 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்