மியான்மரின் கடற்கரை நகரமான சிட்வேயில் ஏற்பட்ட மோக்கா புயலின் தாக்கத்தை விளக்கும் வகையில், செயற்கை கோளின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சுமார் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்தப் புயலினால், 850 வீடுகள், 64 பள்ளிக்கூடங்கள், 14 மருத்துவமனைகள் மற்றும் 7 தொலைதொடர்பு டவர்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.