இந்திய ஐ.டி துறையில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் -இன்பொசிஸ் நிறுவனர் கிரிஸ் கோபாலக்கிருஷ்ணன்
அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை, ஐ.டி நிறுவனங்கள் உருவாக்கும் என்று இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள், செலவுகளையும், விரையங்களையும் குறைக்க பெரிய அளவில் ஆள்குறைப்பு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் ஐ.டி நிறுவனங்கள், 2 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் என்று கிரிஸ் கோபாலக்கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
25ஆவது பெங்களூரு டெக் உச்சி மாநாட்டில் உரையாற்றிய கிரிஸ் கோபாலக்கிருஷ்ணன், ஐ.டி துறையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றார்.