நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2004-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பின் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது. ஆய்வாளர்களாக பணிபுரிந்த 3 நபர்களுக்கு உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கி, அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. தற்போது, 2022-ஆம் ஆண்டிற்கான காலிப்பணிடங்களுக்கு ஆய்வாளர்களாக பணிபுரியும் 14 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.