ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பது பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கமல்ல...யாத்திரை தேர்தலுக்கானது எனக் கூறி சிறுமைப்படுத்த வேண்டாம் என ஜெய்ராம் ரமேஷ் பேச்சு...
ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்த, முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக கே.பாலகிருஷ்ணன் பேட்டி.....
ஆளுநர் வேண்டுமானால் தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்லிக் கொள்ளட்டும்.....நமக்கு எப்போதும் தமிழ்நாடு தான் என சீமான் பேட்டி....
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை...செவிலியர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தகவல்...அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செவிலியர் சங்கம் அறிவிப்பு...
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரு மாடுபிடி வீரர், ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே விளையாட முடியும்...ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மதுரை மாவட்ட நிர்வாகம்....
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது...உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடுகள் தீவிரம்...
தமிழக நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய், சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்...
என்.எல்.சி-க்காக விளைநிலங்களை கையகப்படுத்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துடிப்பது ஏன்?பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி....