எல்லோருக்கும் 100% அபராதம்... கில்லுக்கு மட்டும் 115% - ஏன் தெரியுமா..?
இறுதிப்போட்டியில் பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணிக்கு 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் நடுவரின் முடிவை விமர்சித்ததற்காக கில்லுக்கு 100 சதவீத அபாரதத்துடன் கூடுதலாக 15 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கேமரான் க்ரீன் பிடித்த கேட்ச்சுக்கு 3ம் நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்ததை கில் விமர்சித்து இருந்ததால், ஐசிசி விதிகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.