தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட டெண்டர்...கவுன்சிலர்கள் 10 பேர் கூட்டாக எதிர்ப்பு

Update: 2023-06-15 10:59 GMT

பல்லடம் நகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துக்கு அளித்த டெண்டருக்கு, கவுன்சிலர்கள் 10 பேர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில், எளிதில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்காக டெண்டர், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு, திமுகவை சேர்ந்த விஜயலட்சுமி பழனிச்சாமி உள்பட 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெண்டர் வழங்கப்பட்டதில் பல்வேறு மோசடி முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக, தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டுமெனவும், அவர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக, நகர்மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்டி கவுன்சிலர்களின் கருத்தை கேட்க வேண்டுமெனவும், தங்களது மனுவில் கூறியுள்ளனர். இதனால் பல்லடம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்