அதிபர் தேர்தலில் விலகுகிறாரா பைடன்? உலக வல்லரசை ஆளும் ரேஸில் அடிபடும் தமிழ் பெயர்

Update: 2024-07-04 13:21 GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவது குறித்து ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, 81 வயதாகும் அதிபர் ஜோ பைடன் எதிர்கொள்கிறார். இந்நிலையில், டிரம்ப்புடன் நடந்த நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடனின் தடுமாற்றம், ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், போட்டியிலிருந்து விலக நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பைடனுக்கு மாற்றாக, துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவது குறித்து பைடன் பரிசீலிக்கவில்லை என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்