காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-07 01:02 GMT
  • மத்திய பொது பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்... கூட்டத்தொடர் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்...
  • அயோத்தியில் பாஜகவை தோற்கடித்தது போல் குஜராத்திலும் பாஜகவை தோற்கடிப்போம்... எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி...
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்https://youtu.be/xdBF8yCAqN8ராங் இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு.... அயனாவரம் இல்லத்தில் புத்த மத வழக்கப்படி இறுதி சடங்கு....... அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.....
  • ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு... சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன் ஞாயிறு காலை 8:30 மணிக்கு விசாரணை.......
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்... இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார்...
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது... ஏற்கனவே பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி, புன்னை பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதிரடி.... 
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை... ஆம்ஸ்ட்ராங் உடல் எந்த இடத்தில் அடக்கம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்...
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல...காவல்துறையின் நடவடிக்கையில் திருப்தியில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அதிருப்தி...... 
  • பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்...... எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு......
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள்தான்.. வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆஸ்ரா கர்க் விளக்கம்..
  • ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்று இனி நிகழக் கூடாது... இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்....
  • தமிழ்நாட்டில் தலித்தும், வன்னியர் சமுதாயமும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு..தாழ்த்தப்பட்டவர்கள், வன்னியர் சமுதாயத்தை திமுக சூழ்ச்சியால் பிரித்துவைத்துள்ளதாகவும் விமர்சனம்... 
  • வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல்.... விவிபேட் இயந்திரங்களில் சின்னம் பொருத்தப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு சீல் வைப்பு.....
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு... ஏற்கனவே 9 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ள நிலையில் மேலும் 8 இடங்களில் அமைப்பு...
  • இளங்கலை நீட் கலந்தாய்வு தொடங்குவதில் நீடிக்கும் தாமதம்... மருத்துவம், பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் கலக்கம்.... 
  • படிப்படியான மதுவிலக்கே தமிழ்நாட்டில் சாத்தியம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்... மக்களிடம் மது அருந்துதல் பழக்கமாக மாறிவிட்டதாகவும் கருத்து....
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணி வெற்றி... திருச்சி அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது..
  • ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது...
Tags:    

மேலும் செய்திகள்