அழிவின் விளிம்பில் காஸா... போர் நிறுத்தத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா - ஐநா அதிர்ச்சி

Update: 2023-12-09 11:29 GMT

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது...


இஸ்ரேல் - காசா இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது... இஸ்ரேலிய படைகளால் காசா துவம்சம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்... அவர்களில் 70 சதவீதம் பேர் குழந்தைகள், பெண்கள்... உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன... சுதந்திர பாலஸ்தீன கருத்திற்கு இஸ்ரேல் செவி சாய்க்கவில்லை... இப்போருக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது... ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது... இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதை நிரந்தரமாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன... பிரிட்டன் வாக்களிப்பில் இருந்து விலகியது... ஆனால், ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் எதுவும் இதில் தெரிவிக்கப்படவில்லை என கூறி, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இத்தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது... தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் முகமது அபுஷாஹாப் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்...

Tags:    

மேலும் செய்திகள்