ட்ரம்ப் முடித்த இடத்தில் போட்ட கமா(,).. விவாதத்தின் வீரியத்தை அதிகரித்த கமலா..
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம்...
சக்திவாய்ந்த போட்டியாளர்களான ட்ரம்ப்-கமலா நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முதல் விவாதம்...
4 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமையில் மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை எதிர்கொண்டார் கமலா ஹாரிஸ்...
தான் ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர் என்று தன்னை குறிப்பிட்ட கமலா,
இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்த முன்னேற்ற சரியான திட்டம் வைத்திருக்கும் ஒரே ஆள் தான் தான் என தெரிவித்து... வீடு வாங்கும் கனவோடு உள்ள நடுத்தர குடும்பத்தினருக்கும், குழந்தைகளை வளர்க்க பெற்றோருக்கும் வரிச்சலுகை கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்...
மேலும், சிறுதொழில்கள் வளர ஆதரவளிப்பேன் எனவும் குறிப்பிட்டார்...
ஆனால் ட்ரம்ப்பின் திட்டம் பணக்காரர்களுக்கு மீண்டும் வரிச்சலுகை கொடுத்து அமெரிக்க பொருளாதாரத்தை சிக்கலில் மாட்டி விடுவது தான் என குற்றம் சாட்டினார்...
நாடு தழுவிய விற்பனை வரியை ட்ரம்ப் விதிக்க விரும்புவதாக கமலா முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய ட்ரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார்.
"உலகிற்கு இதற்கு முன்பு நாம் செய்ததற்கு அவர்கள் திருப்பிச் செலுத்தும் நேரமிது" என்று கூறிய ட்ரம்ப்...
சீனாவில் தயாராகும் பொருட்கள் மீது தனது ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளால் தற்போது கூட அமெரிக்கா பல பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார்...
பணவீக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய ட்ரம்ப், வழக்கமான தனது ஆயுதமான அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்கள் குறித்த குற்றச்சாட்டைக் கையிலெடுத்து ஹாரிசைத் தாக்கினார்...
பைடனின் மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சாடினார்...
விவாதம் சூடு பிடிக்கத் துவங்கிய நிலையில்,
டிரம்ப் மீண்டும் மீண்டும் சட்டவிரோத குடியேற்றத்தை பற்றி மட்டுமே பேசுவார்...வேறு எதுவும் பேசுவதில்லை என சாடிய கமலா...
"ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து சென்ற போது அமெரிக்காவை எப்படி விட்டுச் சென்றார் என பேசுவோம்...மிக மோசமான வேலையில்லா திண்டாட்டம்...ஒரு நூற்றாண்டில் மோசமான தொற்றுநோயை விட்டுச் சென்றார்...உள்நாட்டுப் போருக்குப் பிறகு நமது ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதலை ட்ரம்ப் விட்டுச் சென்றுள்ளார்...நாங்கள் அதை சுத்தம் செய்கிறோம்" என சாடினார்...
வரிகளைக் கணிசமாகக் குறைத்து, சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கப் போகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டார் ட்ரம்ப்...
சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு ட்ரம்ப் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார் என சாடிய கமலா...
ட்ரம்ப் சீனாவிடம் அமெரிக்காவை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்...
மேலும் கொரோனா சமயத்தில் ட்ரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்ததை சுட்டிக் காட்டினார்...
டிரம்ப் வாக்குறுதியளிக்கும் திட்டங்களை நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் விமர்சித்ததை சுட்டிக்காட்டி பேசிய கமலா...
டிரம்ப் கூறுவதை அமல்படுத்தினால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று குற்றஞ்சாட்டினார்...