அழிந்த உலக புகழ்பெற்ற நகரம் -``மிச்சம் இருப்பது வெறும் சாம்பலே’’ -இந்த பேரழிவு கற்பனைக்கும் எட்டாதது

Update: 2025-01-13 02:42 GMT

அமெரிக்காவில் ஏழாம் தேதி தொடங்கிய காட்டுத்தீ.... எண்டே இல்லாமல் ஆவேசமாக தொடர்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ இப்போது பல இடங்களில் கொழுந்துவிட்டு எரிகிறது. மலை மீது தீ எரியும் காட்சிகள் ஏதோ எரிமலை வெடித்து கொப்பளிப்பது போல் திகிலூட்டுகிறது..

காட்டுத்தீ செல்லும் வழி எங்கும் வீடுகளையும், வாகனங்களையும் விழுங்கி வருகிறது. பின் தொடரும் காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க மக்கள் தொடர்ந்து வீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு கார்களில் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதியும் இருக்கிறது.. அங்கு சினிமா செட்... ஸ்டுடியோக்கள் எல்லாம் பற்றி எரிகிறது.

10 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான பசுபிக் பாலிசாடஸ் ஓட்டல் காட்டுத் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

மலை மேல் உள்ள நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் மோட்டார் வாயிலாக நீர் எடுக்க முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகளாலும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவிக்கிறார்கள். தண்ணீர் மற்றும் ரசாயனங்களை எடுத்துச் சென்று தீயணைப்பு விமானங்கள் தீயை அணைக்க முயற்சிக்கின்றன.

ஆனால் காற்றின் வேகம் அவர்களது பணிக்கு சவால் விடுக்கிறது. பற்றி எரியும் நெருப்பில் 38,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு சேதம் அடைந்துள்ளது. அங்கு வீடுகளும்... மரங்களும் எலும்புக்கூடாக நிற்கும் காட்சிகளையே காண முடிகிறது.

காட்டுத்தீயால்16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய மதிப்பில் 13 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ தொடர்ந்து பரவிவர எல்லாம் எரிந்துவிட்டது, இங்கு எஞ்சியது சாம்பல் மட்டுமே என மக்கள் கண்ணீரோடு செல்லும் பரிதாப நிலையே நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்