காசா மக்களின் கண்முன்னே தெரியும் அமெரிக்க அதிபரின் வாக்குறுதி-செயற்கைகோள் வெளியிட்ட அரிய புகைப்படம்
காசா எல்லை அருகே அமைந்துள்ள எகிப்தின் ரஃபா க்ராசிங் அருகே மனிதாபிமான உதவிகள் அடங்கிய ட்ரக்குகள் வரிசை கட்டி நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது... ரஃபா வழியே மனிதாபிமான உதவிகள் காசா மக்களுக்கு 48 மணி நேரத்தில் வந்தடையும் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்... போர் துவங்கியது முதல் ரஃபா எல்லை சேவையானது முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லை திறக்கப்பட்டதும் காசாவிற்குள் நுழைய ஏராளமான ட்ரக்குகள் உதவிப் பொருட்களுடன் காத்துக் கிடக்கின்றன.