அமெரிக்காவில் எதிரொலித்த மணிப்பூர் விவகாரம் | manipur issue | America

Update: 2023-08-02 03:55 GMT

மணிப்பூர் விவகாரத்தை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வழி பிரதிநிதிகள் குரல் எழுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஏழாம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பீட்டர் ஃபெடெரிக், காந்திய வழியில் உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில், அவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஷான் ஷங்கரன் என்பவரும், பெங்களூருவில் இருந்து சமூக ஆர்வலர் கிரித்திகா தரன் என்பவரும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் பெரியார் அமைப்புகள், அம்பேத்கர் ஆதரவு அமைப்புகள் சிறுபான்மையினர் ஆதரவு அமைப்புகள் என பலர் ஆதரவு தெரிவித்து கலிபோர்னியா, நியூ ஜெர்சி, பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக பெங்களூருவில் உண்ணாவிரதம் இருந்து வரும் கிரித்திகா தரன் தெரிவித்துள்ளார். வரும் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கவன ஈர்ப்பு உரை கொண்டு வர உள்ளதாகவும் கிரித்திகா தரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்