நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்... காசா போரில் எதிர்பாரா டுவிஸ்ட்

Update: 2024-06-23 09:47 GMT

இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். டெல் அவிவ் நகரின் கப்லான் பகுதியில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், காசா போரைக் கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெதன்யாகுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்... இஸ்ரேல் வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என சாடினர். காசாவில் போரை நிறுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்