ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் - பறந்த சுனாமி எச்சரிக்கை... உயிர் பயத்தில் மக்கள்
ஜப்பானில் உள்ள தெற்கு பிரதான தீவான கியூஷுவின், கிழக்கு கடற்கடையில், சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து மியாசாகி பகுதிக்கு வடகிழக்கே, 20 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.9 மற்றும் 7.1 என நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.