தாய்லாந்து பிரதமராகும் இளம் பெண் - யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

Update: 2024-08-16 11:22 GMT

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேட்டோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் வென்று பிரதமராக பொறுப்பேற்ற ஸ்ரெத்தா தவிசினை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. தண்டனை பெற்றவருக்கு அமைச்சரவையில் இடம் அளித்ததால் அவருடைய பதவி பறிப்போனது. இதனையடுத்து பியூ தாய் கட்சி, தக்சின் மகள் பேட்டோங்டர்ன் ஷினவத்ராவை பிரதமராக தேர்வு செய்திருக்கிறது. 37 வயதாகும் அவர், தாய்லாந்து வரலாற்றில் பிரதமர் அரியணை ஏறும் இளம் தலைவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்