பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் சி.இ.ஓ. பவெல் துரோவ், அஸர்பைஜானில் இருந்து தனியார் ஜெட்டில் பயணம் செய்த நிலையில், விசாரணைக்காக விமான நிலையத்தில், பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். டெலிகிராமில் மதிப்பீட்டாளர்கள் பற்றாக்குறையால், சட்டவிரோத பணப்பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.