இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம்.. அதிபர் ரணில் முன்னிலையில் பதவி பிரமாணம் | Sri Lanka
இலங்கை அமைச்சரவையில் 2 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெனாண்டோவும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். முன்னாள் விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது