இந்த உலகத்துல பொறந்தா எதாச்சும் சாதிக்கனும்டானு... சின்ன வயசுல இருந்தே மனசுலயே வெறிய ஏத்திகிட்ட பலர்... வித விதமான கின்னஸ் சாதனைகள செஞ்சு மாஸ் காட்டிட்டு வராங்க... அதுல சிலர் காயின் கலெக்டர்ஸ்... ஸ்டாம்ப் கலெக்டர்ஸ்னு சின்ன சின்ன விசயங்களை லட்சக்கணக்குல சேகரிச்சு கின்னஸ் சாதனை பண்றதை பாத்துருப்போம்... ஆனா இதை தாண்டி வித்தியாசமான 5 கலெக்டர்ஸ்ஸ பத்தி பாக்க போறோம்... இது எப்டி இருக்கு பகுதில..
இன்னைக்கு நம்ம வாழ்கைய பாதி இயக்குறதே மொபைல் போன் தாங்க... அப்டி பட்ட மொபைல் போன் உங்க கிட்ட எத்தனை இருக்குனு கேட்டா என்ன சொல்லுவீங்க... அதிகப்பட்சம் 1 இருக்குனு சொல்லுவீங்க... இல்லைனா ரெண்டு இருக்குனு சொல்லுவீங்க... ஆனா இங்க ஒருத்தர்ரு 3,615 மொபைல் போன் வச்சுருக்காரு...
Spain நாட்ட சேந்தவரு Palau Fernandez... வெறித்தனமான மொபைல் பிரியரான இவரு 1998-ல நோக்கியா நிறுவனம் வெளியிட்ட 3210 மாடல்ல வாங்கி இருக்காரு.. அங்க ஆரம்பிச்ச இவரோட மொபைல் மோகம் இப்போ 3615 மொபைல் போனா குவிஞ்சிருக்கு...
Siemens, Sony Ericsson, Blackberry, Motorola, HTC, Samsung , Apple பல நிறுவனங்கள் வெளியிட்ட... பழைய செல்லுலார் மாடல் போன்ல இருந்து... நேத்து லாஞ்ச் பண்ண புது ஸ்மார்ட் போன் வரை எல்லாமே இவரோட அலமாரில இருக்கு...
இவரோட இந்த அசாத்திய கலெக்ஷனால மனுசன் கின்னஸ் ரெக்கார்ர்டலயும் largest phone collection-னு சொல்லி தன்னோட பேர பொரிச்சுட்டாரு....
ஏன் சார்... நாங்களாம் ஒரு பொண்ணோட... சாரி... ஒரு போனோட குடும்பம் நடத்துறதே பெரிய சாதனையா இருக்கு... நீங்க எப்டி சார் 3,615 போனோட குடும்பம் நடத்துறீங்க... வேற லெவல் சார் நீங்க...
பல்லு விளக்குற பேஸ்ட்டு முடியுற ஸ்டேஜ்கு வந்தா என்ன பண்ணுவோம்... நல்லா பிதுக்கி எடுத்து.... கடைசியா ஒரு விளக்கு விளக்கி குப்பைல தூக்கி போடுவோம்... அவளோதான்
பட், நம்ம குப்பைல தூக்கி போட்ட பேஸ்டலாம் கலெக்ட் செஞ்சு இங்க ஒருத்தர்ரு கின்ன்ஸ் ரெக்கார்டு பண்ணியிருக்காருங்குறது தான் ஆச்சர்யமான விசயம்...
அமெரிக்காவ சேந்த இவரோட பேரு Val Kolpakov... பல் டாக்டர்ரான இவரு 2001-ல தன்னோட கிளீனிக்லயே மெடிக்கல் ஷாப்ப ஆரம்பிச்சு அங்கனையே பேஸ்ட்டு, பிரஸ்ஸு, மாத்திரைலாம் சேல் பண்ணிருக்காரு...
அந்த நேரத்துல நிறைய பேஸ்ட்டுகள வாங்கி குவிக்க ஆரம்பிச்ச மனுஷன்... பேஸ்ட்ட பத்தி பல ரிசர்ச் பண்றதுக்காக... Japan, Korea, China, India and Russia-னு பல நாடுகளுக்கு சுத்தி திரிஞ்சு... 24 வருஷத்துல கிட்டத்தட்ட 2,420 பேஸ்ட்ட கலெக்ட் செஞ்சுருக்காரு...
இவரோட இந்த சாதனைய சோதனை செஞ்ச கின்னஸ் நிறுவனமும்... நீ பெரிய ஆள்தானு ஒத்துக்கிட்டாங்க...
கிளீனிக்கா இருந்த இவரோட இடம் இப்போ பேஸ்ட் மியூசியமா ஆகிடுச்சு...
பேஸ்ட்டு பேஸ்ட்டுனு லைஃப்ப வேஸ்ட்டு பண்ணிட்டாருனு பாத்தா...
மனுஷன் இதை வச்சே யூடிப்ல மாசம் லட்சக்கணக்குல சம்பாதிச்சுட்டு வராருருங்குறது தான் இவரோட கதைல ஹைலைட் பண்ண வேண்டிய விசயம்...
சின்ன வயசுல ஒரு அழகான டெடிபியர் வாங்கனும்குறது தான் நம்ம எல்லாருக்கும் பிறக்குற முதல் ஆசையே... சிலருக்கு இந்த ஆசை இப்போ வரைக்கும் நிறைவேறமா கூட இருக்கலாம்... ஆனா அந்த நிறைவேறாத ஆசைய தன்னோட வயசான காலகட்டத்துல நிறைவேத்தி கின்னஸ் ரெக்கார்ட் பண்ணிருக்காங்க இங்க ஒரு பாட்டி...
மத்தவங்க கின்னஸ் சாதனை பண்ணாங்க அதுக்கு சில காரனம் இருந்துச்சு... ஆனா பாட்டிய கின்னஸ் சாதனை பண்ண வச்சது, அவங்களோட நிறைவேறாத ஆசை தாங்க...
அமெரிக்காவ சேந்தவங்க Jackie Miley... 68 வயசான Jackie Miley... தன்னோட குழந்தை பருவத்துல... எனக்கு ஒரு டெடிபியர் பொம்மை வாங்கி தாங்கனு பேரன்ட்ஸ் கிட்ட கேட்ருக்காங்க... ஆனா அவங்க வாங்கி தராததுனால பல முறை ஏமாந்து போன Jackie Miley... இனி நானே வேலைக்கு போய் டெடி பியர் வாங்கிக்கிறேன்னு சபதம் எடுத்துட்டாங்க...
பிறகு தன்னோட 20 வது வயசுல வேலைக்கு போயி சம்பாதிக்க ஆரம்பிச்சதும்... தான் ஆசைபட்ட டெடிபியர்களை ஒன் பை ஒன்னா வாங்க ஆரம்பிச்சுருக்காங்க... அதோட விளைவு இப்போ அவங்கிட்ட 9,000-க்கும் மேற்பட்ட டெடிபியர் இருக்கு...
தன்னோட பொம்மைகள வீட்டுல சேகரிக்க முடியாததுனால... அதுக்காகவே பெரிய இடத்தை வாங்கி... கலெக்சனை கன்டின்யூ பண்ணிட்டு வராங்க Jackie Miley... உள்ள போகும் போது ஏதோ டெடிபியர் உலகத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஃபீல் குடுக்கும்...
ஹ்ம்ம் சாதாரன ஒரு பொம்மைக்காக ஏங்குன குட்டி பொன்னு... இப்போ எப்டி ஆகிருக்காங்க பாருங்க...
Jackie Miley-யோட வெறித்தனமான கதைய கேட்ட கின்னஸ் நிறுவனமும் வான்டட்டா முன் வந்து சான்றிதழ் குடுத்து பாராட்டிருக்காங்க...
பாட்டி.... நீங்க பொம்மை பிரியர் இல்ல... பொம்மை வெறியர்ங்குறதை நிரூபிச்சுட்டீங்க...