ஆயுத பூஜை வந்தா நம்மளாம் பூசனிக்காய வச்சு பூஜை பண்ற மாதிரி... ஹாலோவின் வந்துட்டா போதும் பூசனிக்காய வச்சு இல்லாத அலப்பறையலாம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க நம்ம வெளிநாட்டுகாரங்க.... அந்த வகைல பூசினிக்காய்ல படகு செஞ்சு ஓட்டுனது தான்... இந்த ஹாலோவின் சீசனோட ஹைலைட்டான டாப்பிக்கே...
பெல்ஜியம் நாட்டுல கடந்த 2008-ல இருந்து வருசா வருசம் ஹாலோவின் சீசன்ல நடக்குற திருவிழா தான் இந்த பூசினிக்காய் படகு போட்டி...
ஹாலோவின்னாலே பூசினிக்காய்ல பேய் பன்றது, பொம்மை பன்றது, சாப்பாடு பண்றத தாண்டி வேற எதாச்சும் வித்தியாசமா பண்ணலாம்னு முடிவு பண்ண இந்த ஊர் அரசாங்கம்... ராட்சத அளவிளான பூசனிக்காய்ல படகு செஞ்சு... அதுல போட்டியாளர உக்கார வச்சு... தண்ணில மிதக்க விட்டு ரேஸ் நடத்துராங்க...
சும்மா இல்லைங்க இந்த போட்டில கலந்துக்குறதுக்காக நிறைய பேரு... 300 கிலோ எடை கொண்ட பூசனிக்காய உரம் போட்டு வளத்து... அதை போட்டா சீவி செதுக்கி போட்டில ஆர்வத்தோட கலந்துக்கிறாங்க....
போட்டியோட ரூல் என்னனா... யாரு முதல்ல ரவுன்ட் அடிச்சு எல்லை கோட்ட ஃபினிஸ் பன்றாங்களோ அவங்க தான் வெற்றியாளர்...
என்ன... அண்ணனுக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு... ஹோ... ஜெயிச்சுட்டாராமா...
நம்மளாம் பூசினிக்காய்ல கூட்டு தான் பண்ணுவோம்... ஆனா இவங்க போட்டு பண்றாங்க... நல்லாருக்குயா உங்க கொண்டாட்டம்...