28 வருடங்களுக்கு பிறகு.... நைஜீரிய அதிபரை சந்தித்த பிரதமர் மோடி
நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து நேற்று நைஜீரியா புறப்பட்டுச் சென்றார். தலைநகர் அபுஜாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அதிபர் போலா அகமது டினுபுவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு, நைஜீரியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.