கோத்தபயாவிற்கு சிக்கல் - இலங்கை அதிபரின் அதிகாரத்தை பறிக்க முடிவு - ரணில் அறிவிப்பு

இலங்கை அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற, அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-28 03:56 GMT

இலங்கை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 20, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வானளாவிய அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்ய, 21வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக, நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ் தேசிய கூட்டணி மட்டும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சட்டத்திருத்தத்தில் புதிய அம்சங்களை சேர்ப்பது, தீர்மானத்தை நிறைவேற்றும் தேதியை முடிவு செய்வது குறித்து ஜூன் 3ம் தேதி மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்