"3 மாதங்களில் `180' மாடுகள் படுகொலை.." - சிங்களர்கள் அட்டூழியம்.. கொந்தளிப்பில் தமிழர்கள்
இலங்கை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள சிங்கள மக்களால் கடந்த 3 மாதங்களில் 180க்கும் அதிகமான மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பு சித்தாண்டி கிராமத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்... சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்பதைப் போல போலீசார் செயல்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டினர்... மேலும் மயிலத்தமடு, மாதவனையில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றாத நிலையில், மீண்டும் வலியுறுத்துமாறு நீதிபதிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...