மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் ஒன்று, பைக் மற்றும் காரில் மோதி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே, சிலாங்கூர் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையம் அமைந்துள்ளது. இந்தநிலையில் அந்த விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற சிறிய ரக ஜெட் விமானம், அருகிலுள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார் மீது மோதி, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் ஜெட் விமானத்தில் பயணித்த 8 பேர் உள்பட, 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.