டெல்லி வந்துள்ள ஓமன் நாட்டின் மன்னருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் நாட்டின் மன்னர் ஹைதம் பின் தாரிக் இந்தியா வந்துள்ளார். அவரை, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இன்று நண்பகலில், பிரதமர் மோடி, ஓமன் மன்னர் தனிப்பட்ட முறையில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.