``கொல்லப்பட்டார்'' - எதிர்பாரா நேரம்எதிரி கதை முடித்து இஸ்ரேல் அறிவிப்பு.. ஈரான் அதிர்ச்சி
காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசு பிரிவு தலைவர் ராவ்ஹி முஸ்தாஹா கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு காசாவில் பாதுகாப்பு நிறைந்த பாதாள சுரங்கத்தில் 3 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ராவ்ஹி முஸ்தாஹா மற்றும் ஹமாஸ் அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்தார்கள் என இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.