மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுகர்பெர்க்குடன் பழமையான ரோம் நகரத்தில் மோத இருப்பதாக, ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க்கிற்கும், மார்க் ஜுகர்பெர்க்கிற்கும் இடையே வார்த்தைப்போர் நிகழ்ந்து வந்த நிலையில், இருவரும் நேரடியாக மோதிக்கொள்வது குறித்து பேசப்பட்டு வருகிறது. இருவரும் கூண்டுக்குள் மோதிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இருவரும் மோதிக்கொள்ளும் இடத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனக்கும் மார்க் ஸுகர்பெர்கிற்கும் இடையே நடக்கும் மோதல், ட்விட்டர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். பழைமையான ரோம் நகரத்தில் இந்த போட்டிநடைபெறும் என்றும், இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் மற்றும் கலாசார அமைச்சரிடம் பேசி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.