ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக போராட அந்நாட்டிற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் மொத்த ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்... நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சிறிதளவு அதிகரித்துள்ளது என்று ஆப்கானிஸ்தானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது