மணிப்பூர் நிலவரம் - ஜே.பி. நட்டாவிற்கு பறந்த அவசரக் கடிதம்

Update: 2023-10-01 02:22 GMT

மணிப்பூர் மாநில அரசு மீதான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அம்மாநில பாஜக, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி மற்றும் எட்டு முக்கிய நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, மணிப்பூர் நிலவரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், மணிப்பூரில் நிலவும் சூழலுக்கு, நிலைமையை கையாளுவத்தில் மாநில அரசு அடைந்த தோல்வியே காரணம் என மக்கள் கருதுவதாகவும், அதனால் மாநில அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள அரசியலைப்பு சட்டப்பிரிவு 355 -ஐ, திரும்ப பெற வேண்டுமெனவும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பங்களால் வீடுகளை இழந்தவர்களை மறு குடியமர்த்தவும், இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஜே.பி. நட்டாவிற்கு எழுத்தப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்