VIP நடிகரை கொல்ல பாகிஸ்தானிலிருந்து AK47, M16 Guns இறக்குமதி.. 8 மாதம் ஸ்கெட்ச்

Update: 2024-07-02 11:28 GMT

VIP நடிகரை கொல்ல பாகிஸ்தானிலிருந்து AK47, M16 Guns இறக்குமதி.. 8 மாதம் ஸ்கெட்ச்.. இந்தியாவை அதிரவிட்ட சார்ஜ்சீட்

நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சல்மான் கான் வீட்டின் மீது நடந்த துப்பாக்கி சூடு வழக்கில், நடிகரை கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் உட்பட 5 பேர் மீது போலீசார் இறுதி குற்றப்பத்திரிகையை சமர்பித்துள்ளனர். குற்றப்பத்திரிகையின்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடிகரைக் கொல்ல 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர். ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை திட்டத்தை எப்படிச் செயல்படுத்தலாம் என ஆலோசனை செய்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில், பாகிஸ்தானில் இருந்து ஏகே 47, ஏகே 92, எம்16 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு பயன்படுத்தப்பட்ட, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஜிகானா துப்பாக்கி வாங்கவும் திட்டமிட்டிருந்தனர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சல்மான்கானின் பன்வெல் பண்ணை வீடு, பாந்த்ரா குடியிருப்பு, படப்பிடிப்பு செல்வது என சல்மான்கானின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களை இந்த சம்பவத்தில் ஈடுபடுத்துவதாக திட்டமிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு பின், நடிகர் சல்மான கானுக்க இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிட தக்கது

Tags:    

மேலும் செய்திகள்