“சொன்ன மாதிரியே சாதிச்சிட்டோம்.. எல்லாம் உங்களால்தான்“ - நன்றி தெரிவித்து நெகிழ்ந்த டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் குழுவினர் பூமிக்கு திரும்பிய நிலையில், அளித்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதற்காக எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், விண்வெளி வீரர்கள் பத்திரமாக திரும்பியதற்கு எலான் மஸ்க் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு மட்டுமின்றி, அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசாவுக்கும் நன்றி கூறுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


