காய்ச்சி எடுத்த டிரம்ப்.. போரை நிறுத்த சம்மதித்தார் புதின்

Update: 2025-03-19 08:24 GMT

இரண்டரை மணி நேரம் காய்ச்சி எடுத்த டிரம்ப்.. போரை நிறுத்த சம்மதித்தார் புதின்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உடனான இரண்டரை மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பின், உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு, நிபந்தனைகளுடன் ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் மின்சாரம் மற்றும் கட்டுமானங்கள் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்தவும், உக்ரைனுடன் மத்திய கிழக்கு நாடுகளில் புதிதாக உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கவும், ஒவ்வொரு புதன்கிழமையும் 175 ராணுவ கைதிகளை பரிமாற்றம் செய்யவும் புதின் ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் - போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்கக் கூடாது எனவும் புதின் நிபந்தனை விதித்துள்ளார். இதனிடையே, புதினின் கட்டுப்பாடுகளை பார்க்கும்போது போர் நிறுத்தம் வரும் என்று நம்ப முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்