இந்தியாவை உலுக்கி போட்ட பாலியல் கொலை.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்
மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் புறநோயாளிகள் பிரிவை முடக்க கோரும் அழைப்புக்கு பல்வேறு மருத்துவர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள அறிவிப்பில், இன்று முதல் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்து, மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், காலை 11 மணிக்கு நிர்பயா 2 பாய்ன்ட் ஓ (Nirbhaya2.O) என்ற ஹேஸ்டேக் மூலம் டிரண்டிங் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை மருத்துவர்கள் சங்கம், அவசர சேவை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இதே போன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் உட்பட பல்வேறு முக்கிய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.