தொட்டால் நாசமாகும் இஸ்ரேல்.. ஒவ்வொரு நொடியும் நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் - உலகமே பயந்த நாள்

Update: 2024-10-03 16:02 GMT

தொட்டால் நாசமாகும் இஸ்ரேல்.. ஒவ்வொரு நொடியும் நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் - உலகமே பயந்த அந்த ஒரு நாள் - நடுங்கும் ஈரக்குலை

#isreal #iran #iranwar #isrealvsiran #benjaminnetanyahu #america #usa #thanthitv

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதற்கு பிறகு ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடலில் பங்கேற்க கத்தார் சென்ற ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிராந்தியத்தின் பாதுகாப்பே அனைத்து இஸ்லாமியர்களின் பாதுகாப்பாகும், நாங்கள் போரையோ, இரத்தக்களரியையோ விரும்பவில்லை என்றார். ஈரான் அதிபராக பதவியேற்ற பிறகு அமைதி மற்றும் பாதுகாப்புக்காகவே பணியாற்றுவதாக குறிப்பிட்டவர், அமைதிக்கு உறுதியளித்த இஸ்ரேல், ஈரானில் அதிபர் பதவியேற்புக்கு வந்த விருந்தாளிகளை அச்சுறுத்தியது என்றார். இனி இஸ்ரேல் எந்த நடவடிக்கையாவது எடுத்தால் கடுமையான பதிலடியை கொடுப்போம் எனவும் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்