"மிருகமாக மாறிய இஸ்ரேல்; குழந்தைகளின் கல்லறையாக மாறிய காஸா" - கொந்தளித்த ஐ.நா.
தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், பொதுமக்கள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், மசூதிகள், தேவாலயங்கள், ஐ.நா முகமைகள் மீது குண்டு மழை பொழிவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், மக்களை கேடயமாக பயன்படுத்தி, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடர்வதாக புகார் தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையேயான போரில் பொதுமக்களை பாதுக்காப்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றும் ஆனால், காசா நகரம் குழந்தைகளின் கல்லறையாக மாறி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். பன்னாட்டு மனிதாபிமான விதிகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ள குட்டரஸ், மனிதாபிமான போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.