கொல்லப்பட்ட 30 அமெரிக்கர்கள்... போரில் இணைந்த முக்கிய `புள்ளி' - கைவிடப்போகும் அமெரிக்கா.. விழுந்த பேரிடி
இஸ்ரேல் தனது வடக்குப் பகுதியில் போரை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாவ் கேலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடக்கில் யுத்தம் செய்து, நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஹிஸ்புல்லா போரை தேர்ந்தெடுத்தால், அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும், அவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால், அதை மதித்து, நிலைமையை சீராக வைத்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, காசா மீது தாக்குதலுக்கு தயாராகியுள்ள படையணியுடன் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹெலவியும் இணைந்துகொண்டார். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்புக்காக, ஹமாஸை எதிர்த்து போரிடுவது தமது கடமை என்று கூறியுள்ளார்.