காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள்... சிதறி தரைமட்டமான ஹமாஸ் அரண்கள் வான்படையின் ருத்ர தாண்டவம்
ஹமாஸ் படையினர் இருந்த கட்டடங்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தினர். முன்னதாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் ஒருங்கிணைந்த போர்ப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல்வேறு வகையான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் ஹமாஸ் படையின் செயல்பாட்டாளர்கள் இருந்த கட்டடம் மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.