சீன ராணுவத்துக்கு `ஸ்வீட்' - எல்லையில் அதிரடி மாற்றம்... இந்திய - சீனப் படைகள் முழுமையாக வாபஸ்

Update: 2024-10-31 02:48 GMT

சீன ராணுவத்துக்கு `ஸ்வீட்' - எல்லையில் அதிரடி மாற்றம்... இந்திய - சீனப் படைகள் முழுமையாக வாபஸ்

கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய பகுதிகளில், இந்திய -சீனப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதிகளில் கடநத் 2020ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவம் ஊடுருவ முயன்ற நிலையில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்ட நிலையில், எல்லைகளில் இருநாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இருநாட்டு படைகளும் திட்டமிட்டப்படி முறையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. எல்லை பிரச்னை முடிவுக்கு வந்ததை கொண்டாட தீபாவளி பண்டிகை தினமான இன்று, எல்லையில் சீன ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் இன்று இனிப்பு வழங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்