40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு முதன்முறை செல்லும் இந்தியப் பிரதமர்

Update: 2023-08-22 08:58 GMT

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்றுமுதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 2019ம் ஆண்டுக்குப்பின் நடைபெறும் முதல் நேரடி பிரிக்ஸ் மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். இந்நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மோடி புறப்பட்டுச் சென்றார். உச்சி மாநாடு முன்னேற்ற செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதோடு, எதிர்கால செயல்பாடுகளை அடையாளம் காண வாய்ப்பளிக்கும் என பிரதமர் மோதி குறிப்பிட்டார். மாநாட்டின்போது பிற நாட்டுத் தலைவர்களையும் மோடி சந்திக்கவுள்ளார். தென்னாப்பிரிக்க பயணத்தை தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் செல்கிறார். 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்