பிணை கைதியான இஸ்ரேலின் முக்கிய புள்ளிகள்... உயிருக்கு போராடும் நிலையில் மக்கள்..
இஸ்ரேல் மீது போர் தொடுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, வெற்றி இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் ராணுவ முகாம்களில் இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான பொதுமக்களையும் பணயக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த 17 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக, இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தாக்குதலில் 9 நேபாளிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.