கனமழையால் சேதமடைந்த வீடுகளின் கூரைகள்- மழை ஓய்ந்த நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மக்கள்

Update: 2024-03-14 14:09 GMT

அர்ஜெண்டினாவில் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள கம்பனா என்ற நகரத்தில், ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக ஏராளமான வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக கொட்டிய கனமழை நேற்று ஓய்ந்த நிலையில், வீட்டின் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் சில நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், நேற்று மழை இல்லாமல் இருந்தது மக்களை நிம்மதியடையச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்