நஸ்ரல்லாவின் வாரிசை கருவறுத்த இஸ்ரேல்... ஹிஸ்புல்லாவின் இதயத்தை அறுத்தெடுத்த அட்டாக்

Update: 2024-10-23 15:07 GMT

ஹிஸ்புல்லாவில் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்பட்ட ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டார் என்பதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் 27 ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சஃபிதீன் ஆவார் என கருதப்பட்டது. ஆனால் 3 வாரங்களுக்கு முன்பு பெய்ரூட்டில் இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இப்போது அவர் உயிரிழந்துவிட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்