ரத்த வெள்ளத்தில்.. சிதறி கிடக்கும் உடல்கள்.. கதறும் பூமியின் நகர வாயில்

Update: 2024-07-18 14:08 GMT

காசாவில், கடந்த 24 மணிநேரத்தில், இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். 69 பேர் படுகாயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ், இஸ்ரேல் இடையே தொடங்கிய சண்டை நீடித்து வருகிறது. காசா பகுதி மீது இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, காசாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளதாகவும், 89 ஆயிரத்து 166 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸுக்கு மேற்கே அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 26 பேர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்