``EVM... ஹேக் செய்ய முடியும்..'' - மீண்டும் குண்டை தூக்கி போட்ட எலான் மஸ்க் | EVM
அமெரிக்கா நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி என வெளியான தகவலை சுட்டிக்காட்டி இவிஎம் இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும், தேர்தலை அவற்றை அகற்ற வேண்டும் என உலக பணக்காரர் எலான் மஸ்க் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, இந்தியாவில் தயாரிக்கப்படுவது போல் தயாரித்தால் ஹேக் செய்ய முடியாது என்றது. இவ்விவகாரத்தில் எலான் மஸ்க் - பாஜக இடையிலான வாக்கு வாதம் நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டது. இப்போது மீண்டும் முந்தைய கால தரவுகளை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் எலான் மஸ்க், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் எனவும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், நேரில் சென்று வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.